|
அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-3) |
|
|
|
|
rahmath ஆல் எழுதப்பட்டது
|
|
புதன்கிழமை, 09 மே 2012 14:43 |
அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-3)
www.islampaathai.com
அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-1)
அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-2)
மௌலவி எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
குர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி எனும் வேத வெளிப்பாடு. இரண்டும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்டவையே. எனவே இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை. முரண்பாடு இருப்பது போல் தோன்றினால் நமது அறிவில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். ஹதீஸில் ஒரு நாளும் கோளாறு இருக்காது. நாம் புரிந்து கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்போம். எனவே, குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் முரண்படுவது போல் தோன்றினால் இரண்டுக்குமிடையில் இணக்கம் காண முயற்சிக்க வேண்டும். முடியாமல் போனால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. எனவே, இரண்டையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என நம்ப வேண்டும்.
சிலர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான பல ஹதீஸ்களை மறுக்கின்றனர். அவற்றை நம்புபவர்களை வழிகேடர்களாகவும் சிலநேரம் முஷ்ரிக்குகளாகவும் பார்க்கின்றனர். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் போது நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதின் சட்டம்-3 |
|
|
|
|
rahmath ஆல் எழுதப்பட்டது
|
|
புதன்கிழமை, 09 மே 2012 13:48 |
கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதின் சட்டம்-3
www.islampaathai.com
ஹசன் அலீ உமரி- IRGC
ஆடை கணுக்காலில் படுவதில் தவறேதுமில்லை என்று கூறுபவர்களுக்கு மறுப்பு
தமிழகத்தில் சிலர் அவர்கள் செய்த ஆய்வின் அடிப்படையில் ஆடை கணுக்காலைத் தாண்டி தரையில் படாத வரை இருக்குமாறு அணிந்தாலும் தவறேதுமில்லை என்று கூறி வருகின்றனர். இதற்கு ஆதாரமாக அரபி அகராதியை குறிப்பிட்டு அகராதியில் ஜர் என்றால் தரையை தாங்கியவாறு இழுப்பதும், இஸ்பால் தரையில் படுமாறு தொங்கவிடுவதற்கும் சொல்லப்படும். மேலும் ஹதீஸ்களில் ஆடையை கணுக்கால் வரை அணியலாம் என்று வந்துள்ளது. எனவே ஆடை கணுக்காலைத் தொட்டு பூமியில் படாதவரை இருக்குமாறு அணிந்தாலும் தவறேதுமில்லை. ஆடை கணுக்காலில் படவே கூடாது என்று வந்துள்ள சில ஹதீஸ்களில் வரும் அறிவிப்பாளர்கள் தொடர் பலவீனமானதாகும். வேறு சில ஹதீஸ்களில் வந்துள்ள அறிவிப்பாளர் தொடர் சரியானதாக இருந்தாலும் அவை ஆடை கணுக்காலில் படலாம் என்று வந்துள்ள ஹதீஸ்களுக்கு முரணாக இருக்கின்றது. அதனால் அதனை ஆதாரமாக ஏற்கக் கூடாது என்று கூறி வருகின்றனர்.
நமது பதில்: மார்க்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அரபி அகராதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிப்பது ஏற்புடையதல்ல என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அரபி அகராதியில் உள்ள சில வார்த்தைகளுக்கு இஸ்ஸாமிய வழக்கில் வேறு பொருள் கொடுக்கப்படும். உதாரணத்திற்கு 'ஸலாத்' அரபி அகராதியில் இதற்கு 'துஆ' பிராத்தனை என்று பொருள். இஸ்லாமிய வழக்கில் தொழுகையை குறிப்பிட 'ஸலாத்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்பால் என்ற வார்த்தைக்கு அரபி அகராதியில் ஆடையை தரையில் படும்படி தொங்க விடுதல் என்று குறிப்பிட்டு உள்ளதாக கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக பிரபல அகராதி நூலான 'லிசானுல் அரப்' என்ற நூலைக் காட்டுகின்றனர்.
'லிசானுல் அரப்'
|
|
புதன்கிழமை, 09 மே 2012 14:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதின் சட்டம்-2 |
|
|
|
|
rahmath ஆல் எழுதப்பட்டது
|
|
ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012 13:35 |
கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதின் சட்டம்-2
www.islampaathai.com
ஹசன் அலீ உமரி- IRGC
அவ்விதிமுறையின் அடிப்படையில் இதனை ஒரே சட்டமாக்க முடியாது. ஏனெனில் இருவேறு காரணங்களுக்கு (ஆடையை தற்பெருமையுடன் தொங்க விடுவது – தற்பெருமையில்லாமல் தொங்க விடுவது) வந்துள்ள வேறுவேறு சட்டங்களை (நரக நெருப்பில் இருக்கும் - அல்லாஹ் அவர்களை பார்க்க மாட்டான்) ஒன்றாக இணைத்து ஒரே சட்டமாக ஆக்குவது உஸூலின் அடிப்படையில் தவறாகும். குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து சட்டங்களை பெறுவதற்கு விதிமுறைகள் உண்டு. அந்த விதிகளைப் பற்றி மார்க்க அறிஞர்கள் கூறும்போது சட்டங்கள் மற்றும் காரணங்கள் வேறுவேறாக இருக்கும்போது எதைப்பற்றியும் குறிப்பிடப்படாதவற்றை குறிப்பிட்டு கூறப்பட்டதுடன் இணைத்து பொருள் கொள்ள கூடாது.
உதாரணத்திற்கு:
உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:6)
திருடனும் திருடியும் அவ்விருவரும் சம்பாதித்தற்குக் கூலியாக அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவ்விருவரின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (5:38)
கரங்கள் என்ற வார்த்தை (அல்குர்ஆன் 5:38) வசனத்தில் அளவு எதனையும் குறிப்பிடமால் வந்துள்ளது. இதனையே அரபியில் 'முத்லக்' என்பர். (அல்குர்ஆன் 5:6) வசனத்தில் கரங்கள் என்ற வார்த்தை முழங்கை வரை என்ற அளவுடன் குறிப்பிட்டு வந்துள்ளது. இதனை அரபியில் 'முக்கய்யித்' என்பர். (அல்குர்ஆன் 5:38) வசனத்தில் கரங்கள் என்ற வார்த்தை எந்த அளவையும் குறிப்பிடமாலும், (அல்குர்ஆன் 5:6) வசனத்தில் கரங்கள் என்ற வார்த்தை முழங்தை வரை என்று குறிப்பிட்டும் வந்துள்ளது. எனவே எந்த அளவையும் குறிப்பிடாமல் கரங்கள் என்று வந்துள்ளதை முழங்கை வரையுள்ள அளவு என்று குறிப்பிட்டு இவ்விரண்டையும் இணைத்து ஒரே சட்டமாக முழங்கை வரை யாரும் வெட்டுவது கிடையாது. ஏனெனில் இவ்விரு வசனங்களிலும் கரங்கள் என்ற வார்த்தை இருந்தாலும் சட்டங்கள் மற்றும் காரணங்கள் வெவ்வேறாக இருக்கின்றன.
(அல்குர்ஆன் 5:38) வசனத்தில் திருடிய காரணத்தினால் கை வெட்டுதல் என்பது சட்டமாகும். (அல்குர்ஆன்5.6) வசனத்தில் தூய்மை இல்லாமல் இருப்பதின் காரணத்தினால் தூய்மைப்படுத்திக் கொள்ளுதல் என்பது சட்டமாகும். இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து எவ்வாறு ஒரே சட்டமாக்க முடியாதோ அவ்வாறே, ஆடையை கணுக்காலுக்குக் கீழ் தற்பெருமையுடன் மற்றும் தற்பெருமையில்லாமல் அணிவதையும் இணைத்து ஒரே சட்டமாக்க முடியாது. ஏனெனில், இங்கும் காரணங்கள் மற்றும் சட்டங்கள் வேறுபடுகின்றன. எனவே இவை இரண்டும் தனித்தனியான காரணங்கள் மற்றும் சட்டங்களைக் கொண்டதாகும்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதின் சட்டம்-1 |
|
|
|
|
rahmath ஆல் எழுதப்பட்டது
|
|
சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012 14:29 |
கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதின் சட்டம்-1
www.islampaathai.com
ஹசன் அலீ உமரி- IRGC
முஸ்ஸிம்கள் தங்களின் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலை இஸ்லாம் எல்லா நிலைகளிலும் அவர்களுக்கு வழங்குகிறது. அந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் எந்த ஆடையை அணியலாம். எந்த ஆடையை அணியக் கூடாது. ஆண்களின் கீழாடையின் அளவுகோல் என்ன என்பது தொடர்பான சட்டங்களைத் தெளிவாகக் கூறுகிறது.
கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதின் சட்டம்
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனையே புகழ்கிறோம், அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பிழை பொறுக்க வேண்டுகிறோம். நமது நஃப்ஸின் தீங்குகளை விட்டும். நமது அமல்களில் ஏற்படும் கெடுதிகளை விட்டும் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம். எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரை வழிகெடுப்பவர் யாருமில்லை. மேலும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவரை நேர்வழிபடுத்துபவர் யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணையில்லை, முஹம்மத் (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதரும் ஆவார்கள் என நான் சாட்சி கூறுகிறேன்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணித்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3:102)
மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் அதிலிருந்து அதன் துணைவியைப் படைத்து, அவை இரண்டிலிருந்தும் அதிமான ஆண்களையும் பெண்களையும் பரவச்செய்தான். எவனைக் கொண்டு நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கேட்டுக் கொள்வீர்களோ அந்த அல்லாஹ்வையும் மேலும். இரத்த உறவுகளை(த் துண்டித்து நடப்பதை)யும் அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)
|
|
சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012 15:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மேலும் வாசிக்க...
|
|
முரண்பட்ட இரு செய்திகளை இணைத்துத் தீர்வு காண்பதே சிறந்தது! |
|
|
|
|
rahmath ஆல் எழுதப்பட்டது
|
|
வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2012 09:00 |
|
முரண்பட்ட இரு செய்திகளை இணைத்துத் தீர்வு காண்பதே சிறந்தது!
www.islampaathai.com
மௌலவி M.T.M.ஹிஷாம் மதனீ
முரண்பாடு என்பது இரு விடயங்கள் ஒன்றுக்கொன்று எதிராக அமையும் நிலையினைக் குறிக்கும்.
பரிபாசை அடிப்படையில் இப்பதத்தை நோக்கினால், 'இரண்டு ஆதாரங்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு, சரியானதொரு தீர்மானத்தை எடுக்கமுடியாமல் போகும் நிலையினைத் தோற்றுவிப்பது' என்று அமையும்.
முரண்பாடுகளை எவ்வாறு கண்டறிவது?
பொதுவாக, இரு செய்திகளுக்கு மத்தியில் உண்டாகும் முரண்பாடுகள் அனைத்தும் உண்மையான முரண்பாடுகளாகக் கருதப்படுவதில்லை. மாற்றமாக, அதற்கென்று தனியான சில நிபந்தனைகள் உள்ளன. அந்நிபந்தனைகள் எம்முரண்பாட்டில் தாக்கம் செலுத்துகின்றனவோ அதனையே உண்மையான முரண்பாடாகக் கருதமுடியும். அவையாவன:
1. இரு செய்திகளும் குறித்த ஒரு விடயத்தில் ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு செய்தி குறித்த விடயத்தைக் கூடும் என்று மற்றைய செய்தி கூடாது என்றும் கூறக்கூடியதாக இருக்க வேண்டும். ஏனெனில், இரு செய்திகளும் ஒரே வகையான தீர்வுகளை முன்வைக்கும் போது அதனை முரண்பாடாகக் கருத முடியாது.
2. இரு செய்திகளும் தரத்தில் சமமானதாக இருக்கவேண்டும். ஏனெனில், இரண்டுக்கும் மத்தியில் தரத்தில் வேறுபாடு காணப்படும் போது அங்கு மிகவும் தரமானதே தேர்ந்தெடுக்கப்படும்.
3. இரு செய்திகளும் ஒரே காலத்தில் இடம்பெற்ற விடயத்தைக் குறிப்பிட வேண்டும். காலம் வேறுபடும் போது அங்கு முரண்பாட்டிக்கான சந்தர்ப்பம் அற்றுப் போகின்றது. உதாரணமாக அன்னை ஆயிஷா (ரழி) மற்றும் அன்னை உம்மு ஸல்மா (ரழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள். ' நபியவர்கள் நோன்பாளியாக இருக்கும் நிலையில் குளிப்பு கடமையானவராக காலைப்பொழுதை அடையவார்கள்.' (புகாரி, முஸ்லிம், அபூதாவுத்)
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
JPAGE_CURRENT_OF_TOTAL |